/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு வீரர்கள் நலச் சங்கம் பைக் ஊர்வலம்
/
விளையாட்டு வீரர்கள் நலச் சங்கம் பைக் ஊர்வலம்
ADDED : மார் 24, 2025 04:26 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பைக் ஊர்வலம் நடந்தது.
இந்திரா சதுக்கத்தில் துவங்கிய பைக் ஊர்வலத்தை சங்கத்தின் தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
நிர்வாகிகள் ராஜ், ஆறுமுகம், சந்தோஷ், சதீஷ், கோகுல் காந்தி, பாலா, அன்பு நிலவன், செல்வம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பைக் ஊர்வலம் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று, இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில், பல ஆண்டுகளாக சர்வதேச மற்றும் தேசியப் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள்,பயணப்படி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள அனைத்து விளையாட்டு அரங்கங்களை திறக்க வேண்டும்.
சேதராப்பட்டில் சர்வதேச தரத்துடன் கூடிய விளையாட்டு கிராமத்தை ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
விளையாட்டுத் துறைக்கு தனியாக இயக்குநரை நியமிக்க வேண்டும். விளையாட்டு கவுன்சிலில் நடந்த பல கோடி ரூபாய் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.