/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி: காரைக்காலில் வாலிபர் கைது
/
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி: காரைக்காலில் வாலிபர் கைது
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி: காரைக்காலில் வாலிபர் கைது
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி: காரைக்காலில் வாலிபர் கைது
ADDED : நவ 19, 2024 07:38 AM

காரைக்கால்: காரைக்கால் லெமர் வீதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை, கடந்த 17ம் தேதி மர்ம நபர் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.
இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்த ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்றார். புகாரின் பேரில் நகர இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
நாகூர் பகுதியை சேர்ந்த தவ்பீத் அகமது, 28; என்பவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதும், ஓட்டலில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. உறவினர் வீட்டில் தங்கி இருந்த தவ்பீத் அகமதுவை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், தவ்பீத் அகமது மதுபோதைக்கு அடிமையாகி கையில் பணம் இல்லாமல் ஏ்.டி.எம்.,மில் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.