/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தெரு நாய்களுக்கு பிஸ்கெட் போட்டு அட்டூழியம் லாஸ்பேட்டையில் 'வாக்கிங்' செல்வோர் அச்சம்
/
தெரு நாய்களுக்கு பிஸ்கெட் போட்டு அட்டூழியம் லாஸ்பேட்டையில் 'வாக்கிங்' செல்வோர் அச்சம்
தெரு நாய்களுக்கு பிஸ்கெட் போட்டு அட்டூழியம் லாஸ்பேட்டையில் 'வாக்கிங்' செல்வோர் அச்சம்
தெரு நாய்களுக்கு பிஸ்கெட் போட்டு அட்டூழியம் லாஸ்பேட்டையில் 'வாக்கிங்' செல்வோர் அச்சம்
ADDED : அக் 20, 2024 04:52 AM
லா ஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தை சுற்றிலும் கெத்துகாட்ட தெருநாய்களுக்கு பிஸ்கெட் போட்டு தனிநபர்கள் அட்டூழியம் செய்து வருகின்றனர். இதனால், தெரு நாய்கள் அதிகாரித்துள்ளதால், பொதுமக்கள் நிம்மதியாக வாக்கிங் செல்ல முடியாமல் அச்சமடைடைகின்றனர்.
லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் கும்பல், கும்பலாக சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் அவ்வழியே நடந்து செல்வோரையும் பைக்கில் செல்வோர்களையும் துரத்தி கடிக்கின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் மரண பயத்தில் தடுமாறி விழுந்து படுகாயத்துடன் உயிர் தப்பி செல்கின்றனர்.
ஹெலிபேடு மைதானம் பகுதியில் ஏற்கனவே, தெருநாய் பெருகியுள்ள நிலையில், சில தனிநபர்கள் தெருநாய்களுக்கு பிஸ்கட் போட்டு, கெத்து காட்டி தினமும் அட்டூழியம் செய்து வருகின்றனர். குறிப்பாக குமரன் நகர், ஹெலிப்பேடு மைதானம், நாவற்குளம், ஏர்போர்ட் சாலை, தாகூர் கலை கல்லுாரி மைதானம், கல்லுாரி சாலைகளில் கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டுடன் நடந்து சென்று தினமும் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இவர்களை சுற்றிலும் எந்நேரமும் 25 தெரு நாய்கள் பின்னாலே ஓடுகின்றன. ஒரு பிஸ்கெட் பாக்கெட்டினை திறந்து அவர்கள், கெத்தாக சாலையில் வீசியதும் ஒட்டுமொத்த தெருநாய்களும் பிஸ்கெட்டிற்காக ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டு, ஒன்றையொன்று கடித்து குதறியபடி ஓடுகின்றன.
சிறிது துாரம் சென்றதும் அக்கும்பல் மீண்டும் பிஸ்கெட்டுகளை சாலையில் வீசி எறிந்து தெருநாய்களை மேலும் வெறிபிடிக்க செய்கின்றனர். பிஸ்கெட் கிடைக்காமல், ஆக்ரோஷமடையும், தெருநாய்கள் வாக்கிங் செல்லுவோரையும் அப்படியே துரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் வாங்கிங் செல்லுவோர் மரண பீதியில், கையில் கிடைக்கும் பொருட்களை, தெருநாய்கள் மீது வீசி எறிந்து உயிர் தப்பி வருகின்றனர்.
தெருநாய்களுக்கு பிஸ்கட் போடுபவர்களுக்கு, உண்மையில் நாய்கள் மீது கரிசனமும், அக்கறையும் இருந்தால், அனைத்து நாய்களையும் அந்த நபர், அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று மூன்று வேளையும் பிரியாணி, பிஸ்கட் போட்டு வளர்க்கட்டும். இதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
ஆனால், ஏற்கனவே இப்பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெருநாய்களுக்கு சோறு, பிஸ்கெட் போட்டு மேலும் தொல்லை கொடுப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படியே வாங்கிங் செல்வோர் சோறு, பிஸ்கட் போட்டுக்கொண்டே இருந்தால், இப்போது இருக்கின்ற 25 தெருநாய்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 100, 200 ஆக பெருகிவிடும் அபாயம் உள்ளது.
எனவே, தெருநாய்களிடம் கெத்து காட்டுவதற்காக பிஸ்கெட் போடுபவர்களை பிடித்து, லாஸ்பேட்டை போலீசார் கடுமையாக எச்சரிக்க வேண்டும். உழவர்கரை நகராட்சி லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதான பகுதியில் அதிகரித்துள்ள தெருநாய்கள் விஷயத்தில் தனி கவனம் செலுத்தி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.