ADDED : ஏப் 30, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் :  கொத்தனாரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த கீழ்பரிக்கல்பட்டு புதுநகரை சேர்ந்தவர் நவீஸ், 30; கொத்தனார்.
இவர் நேற்று முன்தினம் குளிர்பானம் வாங்கி வர, அருகில் உள்ள பெட்டி கடைக்கு சென்றார்.
அப்போது, அதே ஊரைச் சேர்ந்த பிரதாப் என்பவரும், அந்த கடைக்கு வந்துள்ளார்.
அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரதாப், நவீசை தாக்கினார்.
இது குறித்து நவீஸ் அளித்த புகாரின் பேரில், பிரதாப் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

