/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல்
/
வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல்
ADDED : ஜன 08, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மீன் வியாபாரியை இரும்பு பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, குருசுக்குப்பம் மரவாடி வீதியை சேர்ந்தவர் சித்தானந்தன், 40; மீன் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 1ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர், குடி போதையில், சித்தானந்தனை, அவதுாறாக பேசி, இரும்பு பைப்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
படு காயமடைந்த, அவர், அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, ராஜேைஷ தேடி வருகின்றனர்.