/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்காவல் படைவீரர் மீது தாக்குதல்: 4 பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை
/
ஊர்காவல் படைவீரர் மீது தாக்குதல்: 4 பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை
ஊர்காவல் படைவீரர் மீது தாக்குதல்: 4 பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை
ஊர்காவல் படைவீரர் மீது தாக்குதல்: 4 பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை
ADDED : நவ 20, 2025 06:00 AM
புதுச்சேரி: ஊர் காவல் படை வீரரை தாக்கியவர்களுக்கு 3 ஆண்டு சிறை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்பளித்தள்ளது.
அரியாங்குப்பம், வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் பிரவீன், 27; ஊர்க்காவல் படை வீரர். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி பிரவீனை முன்விரோதம் காரணமாக அதேப் பகுதியை சேர்ந்த விக்கி, 35; ஸ்டாலின், அபிமன்யூ, சாண்டிலியன் ஆகியோர் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார், வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 3வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நர்மதா முன்னிலையில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில் விக்கி, ஸ்டாலின், அபிமன்யூ, சாண்டிலியன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ஹரிஹரண் ஆஜரானார்.