/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழக்கறிஞர், செவிலியர் மீது தாக்குதல்
/
வழக்கறிஞர், செவிலியர் மீது தாக்குதல்
ADDED : மே 05, 2025 06:06 AM
புதுச்சேரி : மூலக்குளத்தில் வழக்கறிஞர், செவிலியரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார், பெருமாள்புரத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 38. இவரது மகன் தமிழ் அழகன், புதுச்சேரி கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழ் அழகன், மூலக்குளம் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் தனது தோழியை, பைக்கில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, மூலக்குளம் மெயின் ரோட்டில், அதிகவேகமாக வந்த தனியார் பஸ், தமிழ் அழகன் பைக் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதனால், நிலை தடுமாறி தமிழ் அழகன் தோழியுடன் கீழே விழுந்துள்ளார்.
ஆனால், பஸ் நிற்காமல் சென்றதால், பஸ்சை பின்தொடர்ந்து சென்று தமிழ் அழகன் அரும்பார்த்தபுரம் அருகே தடுத்து நிறுத்தி அதிவேகமாக சென்றது குறித்து டிரைவர் ராஜசேகரிடம் கேட்டுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், கோபமடைந்த தனியார் பஸ் டிரைவர் ராஜசேகர், நடத்துனர் பிரசாந்த், பஸ் உரிமையாளர் கோடீஸ்வரன் ஆகியோர் தமிழ் அழகனை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கியுள்ளனர். இதனை தடுக்க சென்ற அவரது தோழியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்து மயங்கி கீழே விழுந்த, தமிழ் அழகனை உடன் இருந்த அவரது தோழி மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
இதுகுறித்து தமிழ் அழகன் தாய் விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், தமிழ் அழகனை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.