/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாராயக்கடை ஊழியர் மீது தாக்குதல்
/
சாராயக்கடை ஊழியர் மீது தாக்குதல்
ADDED : ஆக 14, 2025 11:51 PM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே சாராயக்கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் பைபாஸ், ஆற்றங்கரை பகுதியில் கணுவாப்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் சாராயக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த வேலவன், 56, என்பவர் விற்பனை ஊழியர்.
கடந்த 12ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் கடையில் துாங்கிய வேலவனை எழுப்பிய ஆரியப் பாளையத்தை சேர்ந்த சங்கர் மகன் ஹரிஷ்குமார், 19; செல்வகுமார் மகன் சுதன், 19, மற்றும் சிலர் ஓசியில் சாராயம் கேட்டுள்ளனர்.
அவர், தராததால், ஆத்திர மடைந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்து மயங்கி கிடந்த வேலவனை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.