ADDED : மே 15, 2026 03:39 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, ரெயின்போ நகர், 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரவி, 47; அண்ணா சாலையில் மொபைல் போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார்.
இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன், வாணரப்பேட்டையை சேர்ந்த ஷெரீப் என்பவரிடம் வட்டிக்கு 2 லட்சம் ரூபாய் வாங்கியிருந் தார். அதில் 50 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஷெரீப் அண்ணா சாலையில் உள்ள ரவி கடைக்கு சென்று கொடுத்த பணத்தை திரும்பி கேட்டார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஷெரீப், ரவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த ரவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அவரது புகாரின் பேரில், பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
