ADDED : பிப் 14, 2024 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் பழைய காமராஜ் காமராஜர் நகரை சேர்ந்தவர் அறிவழகன் 28; லாரி டிரைவர்.
இவர் நேற்று முன்தினம் மாலை தனது தம்பி ஆனந்த் 23; நண்பர் ஏழுமலை 23; ஆகியோருடன் பைக்கில் மணப்பட்டு - புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தார்.
கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் அருகே சென்ற போது, வார்க்கால் ஓடையை சேர்ந்த சுஜித், ராஜேஷ், கலைச்செல்வன் ஆகியோர் வழிமறித்து, நீங்கள் இந்த பக்கம் வரகூடாது என கூறி அறிவழகன், ஆனந்த், ஏழுமலை மீது தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

