/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்சங்க பிரமுகர் மீது தாக்குதல் பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்
/
தொழிற்சங்க பிரமுகர் மீது தாக்குதல் பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்க பிரமுகர் மீது தாக்குதல் பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்க பிரமுகர் மீது தாக்குதல் பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 15, 2024 05:15 AM

திருக்கனுார்: தொழிற்சங்க துணை செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, திருக்கனுாரில் பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ம.க., தொழிற்சங்க துணை செயலாளர் அச்சுதன், சில தினங்களுக்கு முன் மர்ம நபர்களால் தமிழகப் பகுதியான ஆண்டியார்பாளையத்தில் தாக்கப்பட்டார். கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, புதுச்சேரி பா.ம.க., சார்பில் திருக்கனுார் பஜார் வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார்.
விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாநில வன்னியர் சங்கத் தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை அமைப்பாளர்கள் வடிவேல், புருஷோத்தமன், சங்கர், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் முத்து, மண்ணாடிப்பட்டு தொகுதி தலைவர் எழுமலை உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இசம்பவத்தில் குற்றவாளிகளை தமிழக போலீசார் உடனே கைது செய்ய வேண்டும். இல்லையெனில், மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.