ADDED : ஏப் 09, 2026 10:39 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு ஓட்டுச்சாவடியில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சந்தேக நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு 30 தொகுதிகளிலும் நேற்று நடந்தது. இந்நிலையில், மண்ணாடிப்பட்டு தொகுதி, மண்ணாடிப்பட்டு ஓட்டுச்சாவடி அருகிலுள்ள தமிழகப் பகுதிகளை சேர்ந்த சிலர் கள்ள ஓட்டு போடுவதற்காக சுற்றி வருவதாக பா.ஜ., மற்றும் காங்., கட்சியினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு கட்சியினரையும் சமாதானம் செய்து வைத்து, சந்தேகப்படும்படி அங்கு சுற்றிய ஒருவரை போலீசார் கைது ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
