/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக ரூ. 11 லட்சம் மோசடி செய்ய முயற்சி; காரைக்காலில் 2 பேர் கைது; ஒருவருக்கு வலை

ADDED : செப் 27, 2025 02:35 AM
காரைக்கால் : காரைக்காலில் ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக போலி ஆவணங்கள் தயார் செய்து, ரூ. 11 லட்சம் மோசடி செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், கோட்டுச்சேரி, திருவேட்டக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (எ) செங்குட்டவன்; விறகு கடை வைத்துள்ளார்.
இவரது மகன் முத்தரசன் படித்துவிட்டு தனது தந்தையின் தொழிலை கவனித்து வந்தார்.
குமாருக்கு அப்பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார், 39, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது முத்தரசனுக்கு ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு 11 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என, குமாரிடம் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். பின், பலமுறை குமாரிடம் ராஜ்குமார் பணம் கேட்டு வந்தார்.
இதனிடையே ராஜ்குமார் மற்றும் நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஆனந்தி, 33; மற்றும் ரவிசங்கர், 40, ஆகியோர் குமாரை தொடர்பு கொண்டு பணம் கொடுத்தால் வேலைக்கான ஆர்டரில் ஜிப்மர் நிர்வாகத்தின் தலைமை அதிகாரி கையொப்பமிடுவார் எனக் கூறி, அதற்கான விண்ணப்பத்தையும் காண்பித்துள்ளனர்.
விண்ணப்பம் குறித்து குமார் ஜிப்மர் நிர்வாகத்தில் விசாரித்தபோது, அது போலியானது என, தெரிய வந்தது.
இது குறித்து அவர், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், ராஜ்குமார் உள்ளிட்ட மூவரும் போலியாக ஜிப்மர் முத்திரை மற்றும் விண்ணப்பம் தயார் செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, ராஜ்குமார், ஆனந்தி ஆகியோரை கைது செய்தனர். ரவிசங்கரை தேடி வருகின்றனர்.