/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 5 பேரிடம் விசாரணை
/
கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 5 பேரிடம் விசாரணை
கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 5 பேரிடம் விசாரணை
கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 5 பேரிடம் விசாரணை
ADDED : மார் 20, 2025 05:06 AM
வில்லியனுார் : வில்லியனுார், கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி,31; இவரது நண்பர் அஜித்,25; இருவரும் கொத்தனார். தட்சிணாமூர்த்தி வீட்டிற்கு அஜித் அடிக்கடி சென்று வந்ததில், அவரது மனைவி சவுந்தர்யா,26;வுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதனை அறிந்த தட்சிணாமூர்த்திக்கு இருவரையும் கண்டித்தார்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு வீட்டில் துாங்கிய தட்சணாமூர்த்தியை, அஜித் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த தட்சணாமூர்த்தி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, தட்சணாமூர்த்தியின் மனைவி சவுந்தர்யா உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.