ADDED : ஏப் 10, 2026 06:43 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், மேஜர் சரவணன் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் தினேஷ்குமார், 19; ஏ.சி. மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான தர்மபிரபு, குப்பு, சந்தோஷ் ஆகியோருடன் பொன்னியம்மன் கோவில் அருகே உள்ள பாலத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, தினேஷ்குமாருக்கும், சந்தோஷிற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. அங்கு வந்த சந்தோஷின் நண்பர் கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஜெகதீஷ், தினேஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷ்குமாரை தலையில் வெட்டினார். , படுகாயமடைந்த தினேஷ்குமார் கிழே மயங்கி விழுந்ததால், சந்தோஷ், ஜெகதீஷ் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
தினேஷ்குமாரை, தர்மபிரபு மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், ஜெகதீஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் மீது லாஸ்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.
