/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்க முயற்சி
/
அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்க முயற்சி
ADDED : மார் 17, 2025 02:34 AM
பாகூர்: அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுகுப்பத்தை சேர்ந்தவர் கமாலுதீன் மனைவி விஜயலட்சுமி, 37; பாகூர் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 5ம் தேதி மாலை பணி முடிந்து மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் தனியார் கம்பெனி அருகே சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் 4 பேர், திடீரென விஜயலட்சுமி கழுத்தில் இருந்த தங்க செயினை பிடித்து இழுத்தனர். அப்போது, விஜயலட்சுமி சாதுாரியமாக செயல்பட்டு அவர்கள் கையை தட்டிவிட்டு, நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.