ADDED : மார் 10, 2026 04:33 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் கடத்தி சென்ற மதுபாட்டில்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மத்திய ரயில்களில் பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் கடத்தலை தடுக்கும் வகையில் தீவிர ரோந்து பணி ஈடுபட ரயில்வே போலீசாருக்கு தேர்தல் துறைஅறிவுருத்தியுள்ளது.
அதன்படி புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயிலில் நேற்று மதியம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரத்குமார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 பைகள் மட்டும் தனியாக இருந்தது. அந்த பைகளை சோதனை செய்த போது ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
