ADDED : ஜூன் 14, 2025 01:03 AM

புதுச்சேரி : புதுச்சேரி மலக்குறவன் பழங்குடியினர் நலவாழ்வு சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி, தலப்பாகட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். மலக்குறவன் பழங்குடியினர் நலவாழ்வு சங்கத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். பழங்குடியினர் விடுதலை இயக்கம் மாநில செயலாளர் ஏகாம்பரம் வரவேற்றார்.
ஆதிகுடி காட்டுநாயகன் பழங்குடியின மக்கள் இயக்க தலைவர் தனபால், மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு செயலாளர் புருேஷாத்தமன், பிற்படுத்தப்பட்டோர் பழங்குடியினர் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் பூர்வ குடிகளாக இருக்கும் மலக்குறவன், காட்டுநாயக்கன், எருகுலா, குருமன்ஸ் ஆகிய பழங்குடியின மக்களை, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அட்டவணை பழங்குடியினர் என அங்கீகரிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.