/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு மைதானம் கோரி கவன ஈர்ப்பு போராட்டம்
/
விளையாட்டு மைதானம் கோரி கவன ஈர்ப்பு போராட்டம்
ADDED : ஜூலை 14, 2025 03:36 AM

பாகூர் : கிருமாம்பாக்கம் பகுதியில், விளையாட்டு மைதா னம் அமைக்க கோரி, விளையாட்டு வீரர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருமாம்பாக்கத்தில் விளையாட்டு திடல் இல்லாத நிலையில், அங்கு தனியார் கல்லுாரி எதிரே உள்ள இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக, பேஸ்பால், சாட் பால், கயிறு இழுத்தல், டென்னிஸ் பால் கிரிக்கெட், உள்ளிட்ட விளையாட்டுகளில் இளைஞர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.
இதன் மூலம், கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 14 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 54 தங்கம், 34 வெள்ளி, 32 வெண்கல பதக்கங்களை வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இதனிடையே விளையாட்டு திடலாக பயன்படுத்திய இடம், மனைகளாக மாற்றப்பட்டது. சரியான மைதானம் இல்லாதால், பயிற்சி பெற முடியாமல் விளையாட்டு வீரர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கிருமாம்பாக்கம் பகுதியில், ஒருங்கிணைந்த விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டி, விளையாட்டு வீரர்கள் கவன ஈர்ப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டில் நடந்த போராட்டத்திற்கு, சோமநாதன் தலைமை தாங்கினார். சுசீந்தரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் களாக காங்., மாநில செயலாளர் மோகன்தாஸ், புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்க தலைவர் வளவன், தந்தை பிரியன், லெனின், கலைவாணன், வெற்றிச்செல்வன், பார்த்திபன், செந்தமிழ் உட்பட பலர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில், நிலம் ஆர்ஜிதம் செய்து விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டி கோஷம் எழுப்பினர்.