தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்குவரத்து துறையில் பேன்சி எண்கள் 22ல் ஏலம்

போக்குவரத்து துறையில் பேன்சி எண்கள் 22ல் ஏலம்

போக்குவரத்து துறையில் பேன்சி எண்கள் 22ல் ஏலம்


ADDED : அக் 18, 2024 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து துறையின் பி.ஓய்-05 டி வரிசை எண்கள் இணையதளத்தில் 22ம் தேதி ஏலம் விடப்படுகிறது.

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

போக்குரவத்து துறையின் பி.ஓய்-05 டி (உழவர்கரை) வரிசையில் உள்ள எண்கள் https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் வரும் 22ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏலம் விடப்படுகிறது.

ஏலத்தில் பங்கேற்க தேவையான யூசர் நேம், கடவுச்செல்லை (பாஸ்வேர்டு) https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் 'நியூ பப்ளிக் யூசர்' கிளிக் செய்து, இன்று வரும் 21ம் தேதி வரை பதிவு செய்பவர்கள் மட்டும் 22ம் தேதி காலை 11.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம்.

பங்குபெறுவதற்கான வழிமுறைகளை httos://transport.pv.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்ப தொகை, இ.எம்.டி., மற்றும் ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்கள், இதர விவரங்களை போக்குவரத்து துறை அலுவலக தொலைபேசி எண் 0413 2280170 (விரிவு) 236 மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முன் பதிவு செய்யப்பட்ட வாகனம் அந்த எண்ணை 90 நாட்களுக்குள் பதிவு செய்ய தவறினால், முன்பதிவு காலாவதியாகிவிடும். ஏலம் சம்மந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் ஆன் லைன் மூலமாகவே பெறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us