ADDED : மார் 28, 2026 11:01 PM

புதுச்சேரி: சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 26ம் ஆண்டு விழா கல்லுாரி கலையரங்கத்தில் நடந்தது.
தமிழ்துறை உதவி பேராசிரியர் வெண்ணிலா வரவேற்றார். கல்லுாரி தலைவர் நித்தியானந்தன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சிவசங்கரி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
ஆடிட்டர் ராமு கலந்து கொண்டு, கல்லுாரியில் சிறந்த விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கணேஷ்பாபு சிறப்புரையாற்றினார்.
சென்னை, சுபாஸ்ரீ பள்ளிகள் மற்றும் எஸ்.எம்.வித்யாலயா பள்ளி தலைவரும், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில இணை செயலாளருமான சுபா சுப்ரமணியன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
நிர்வாக அதிகாரி திலகவதி உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வேதியியல் துறைத் தலைவர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.
