/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை வளாகத்தில் ஆஸ்திரேலியா நீர்காகம்
/
சட்டசபை வளாகத்தில் ஆஸ்திரேலியா நீர்காகம்
ADDED : டிச 05, 2024 06:58 AM

புதுச்சேரி: சட்டசபையில் விழுந்த ஆஸ்திரேலியாவின் பெரிய நீர்காகம் வனத் துறையில் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் கருப்பு நிற பெரிய பறவை ஒன்று பறக்க முடியாமல் விழுந்து கிடந்தது. தத்தியப்படி அங்கும் இங்கும் சென்றது. அதை கண்ட சட்டசபை பாதுகாவலர்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வனத் துறை ஊழியர்கள் அதனை மீட்டனர்.
இது குறித்து வனத் துறை ஊழியர்கள் கூறுகையில், 'சட்டசபை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட கிரேட் கமுரண்ட் எனப்படும் பெரிய நீர்காகம்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இப்பறவை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் பரவலாகவே காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இப்பறவை அங்கு கருப்பு நீர்க்காகம் எனவும், இந்தியாவில் பெரிய நீர்க்காகம் எனவும், நியூசிலாந்தில் கருப்புப் பறட்டை எனவும் அழைக்கப்படுகிறது. புயல் காரணமாக இறக்கை அடிப்பட்டு விழுந்துள்ளது. சிகிச்சை பிறகு பறக்கவிடப்படும்' என்றனர்.