/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டிசம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
/
ஆட்டிசம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
ADDED : ஏப் 07, 2025 06:23 AM

புதுச்சேரி; உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் ஆட்டிசம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
சபாநாயகர் செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். காந்தி சிலையில் துவங்கிய மாரத்தான் தலைமை செயலகம், குபேர் சாலை, ஆம்பூர் சாலை, தீயணைப்பு நிலையம், கடற்கரை சாலை வழியாக மீண்டும் காந்தி சிலையை அடைந்தது. மாரத்தான் போட்டியில் 300க்கு மேற்பட்ட என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களில் கவுதம் முதலிடம், சரவணன் இரண்டாம் இடம், ஜெய்குமார் மூன்றாம் இடம் பிடித்தனர். மாணவிகளில் தேவி முதலிடம், புவனா இரண்டாம் இடம், தமிழ் செல்வி மூன்றாம் இடம் பிடித்தனர். முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக அரசு ராஜிவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கண்காணிப்பாளர் அய்யப்பன், டாக்டர்கள் சிவப்பிரகாசம், வேல்பிரசாந்த், ஜீவன் பச்சிளங்குழந்தை மற்றும் குழந்தை நல மையம் நிறுவனர் அகிலா, அரிச்சுவடி மனநல மையம் நிர்வாக இயக்குநர் இளவழகன், ரீபார்ன் மல்டிஸ்பெஷாலிட்டி தெரபி சென்டர் இயக்குநர் மகாலட்சுமி, இணை இயக்குனர் தினேஷ் மற்றும் ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.

