sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலியான விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட ஆட்டோ டிரைவர்கள்

/

போலியான விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட ஆட்டோ டிரைவர்கள்

போலியான விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட ஆட்டோ டிரைவர்கள்

போலியான விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட ஆட்டோ டிரைவர்கள்


ADDED : டிச 14, 2024 03:33 AM

Google News

ADDED : டிச 14, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னிப்பு கேட்டதால் விடுவிப்பு

புதுச்சேரி: போலியாக விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட ஆட்டோ டிரைவர்கள் மன்னிப்பு கேட்டதால் விடுவிக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் கன மழை காரணமாக கடந்த 12 மற்றும் 13ம் தேதி பள்ளி கல்லுாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்தார்.

ஆனால் கடந்த 11ம் தேதி அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவிப்பதற்கு முன்னதாக, 12ம் தேதி பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு போல வாட்ஸ் ஆப்புகளில் தவறான தகவல் பரவியது.

இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், போலியான விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது, முத்தியால்பேட்டை சின்னையாபுரம் ஐஸ்வர்யா ராஜ் மற்றும் கலைவாணன் என தெரியவந்தது.

ஆட்டோ டிரைவர்களான இருவரும் விளையாட்டிற்காக, பழைய அமைச்சரின் அறிவிப்பு செய்தி குறிப்பை எடிட் செய்து அனுப்பியது தெரியவந்தது.

இருவரையும் சைபர் கிரைம் போலீஸ் பிடித்தனர். இருவரும் தவறுதலாக செய்ததாகவும், புதுச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக வீடியோ வெளியிட்டனர். அதனை ஏற்று இருவரும் விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us