/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ தொழிற்சங்கங்கள் சட்டசபை நோக்கி பேரணி
/
ஆட்டோ தொழிற்சங்கங்கள் சட்டசபை நோக்கி பேரணி
ADDED : மார் 19, 2025 04:17 AM

புதுச்சேரி, : புதுச்சேரி மாநில அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டு போராட்டுக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி ஆட்டோ பேரணி நேற்று நடந்தது.
ராஜா தியேட்டர் அருகே துவங்கிய ஆட்டோ பேரணி, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை நோக்கி சென்றது.
மாதா கோவில் அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதால், பேரணியாக சென்றவர்கள், அங்கேயே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஆட்டோ உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தை 10 கோடி நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.
மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும்.
ரேபிட்டோ, இ பைக், வாடகை டூவீலர், ஓலா, உபர் போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் செயலாளர் ராஜாங்கம், சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சீனுவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.