/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
/
ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 23, 2025 11:14 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் தட்டுப்பாடின்றி சி.என்.ஜி., காஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சி.என்.ஜி., காஸ் பயன்படுத்தும் ஆட்டோ தொழிலாளர்கள், கலெக்டர் குலோத்துங்கனிடம் அளித்துள்ள மனு;
புதுச்சேரியில் 400க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சி.என்.ஜி., காஸ் மூலமாக இயக்கப்பட்டு வருகின்றன. டாக்ஸி, வேன், வெளி மாநில சுற்றுலா வாகனங்கள், பைக் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சி.என்.ஜி., காஸ் நிரப்பும் நிலையம் மேட்டுப்பாளையத்தில் மட்டுமே இயங்கி வருகிறது. அங்கும், மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் காஸ் நிரப்ப முடிகிறது.
காஸ் கிடைக்காததால் வாகனங்கள் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு கானும் வகையில், புதுச்சேரி நகரின் நான்கு திசைகளிலும் காஸ் நிரப்பும் நிலையம் அமைத்திட வேண்டும். தட்டுப்பாடின்றி 24 மணி நேரமும் காஸ் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சந்திப்பின் போது, சி.ஐ.டி.யு.,மாநில செயலாளர் சீனுவாசன், ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார், சி.என்.ஜி.,காஸ் ஆட்டோ தொழிலாளர்கள் உடனிருந்தனர்.