/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி போத்தீஸில் பரிசளிப்பு விழா
/
புதுச்சேரி போத்தீஸில் பரிசளிப்பு விழா
ADDED : ஜன 29, 2024 06:58 AM

புதுச்சேரி : புதுச்சேரி போத்தீஸில் குழந்தைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப் பட்டது.
புதுச்சேரி போத்தீஸில் புத்தாண்டு அன்று நடத்தப்பட்ட கேரம், செஸ், ஓவிய போட்டியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். அதில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா போத்தீஸ் வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். போக்குவரத்து வடக்கு மற்றும் கிழக்கு பிரிவு எஸ்.பி., மாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.
போட்டிகள் நடத்தி பரிசு வழங்கிய போத்தீஸ் நிறுவனம் மற்றும் போத்தீஸ் மேலாளர் பாலமுருகனை போட்டியில் பங்கேற்ற குழந்தைகள், பெற்றோர் பாராட்டினர்.
ஏற்பாடுகளை போத்தீஸ் மனிதவள மேலாளர் மகேஷ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.