ADDED : அக் 06, 2024 04:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் துளுவ வேளாளர் நலசங்கம், துளுவ வேளாளர் கல்வி மற்றும் சாரிடபுள் டிரஸ்ட் மற்றும் புதுச்சேரி துளுவ வேளாளர் திருமண தகவல் மையம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல், இலவச மங்கல சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
சங்க மாநில தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் அருள்செல்வம் வரவேற்றார். பொதுச்செயலாளர் ரவி ஒருங்கிணைத்தார். ஆலோசகர் விஸ்வநாதன், துணை தலைவர் சேகர், ஆறுமுகம், ராமலிங்கம், இணை செயலாளர் கணபதி முன்னிலை வகித்தனர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற துளுவ வேளாளர் சமுதாய மாணவர்களுக்கு 20 கிராம் தங்க காசுகளை மானாடெக் சேர்மன் மனநாதன், பி.ஆர்., பிரைடு ராமமூர்த்தி, தொழிலதிபர் மதிவாணன், கிருஷ்ணா கார்ட்ஸ் கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தா ஜூவல்லரி பரந்தாமன், வெற்றி ஜூவல்லரி வெற்றி, என்.ஆர்., காங்., தணிகைவேல், சிவசக்தி அர்க்கிடெக்கட் சிவவிஜயன் சிவராமன் வழங்கினர்.
தொடர்ந்து, துளுவ வேளாளர், அகமுடையார், வேளாளர் பிள்ளை, வெள்ளாழ முதலியார் சமுதாய மணமக்களுக்கு இலவச மங்கல சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. சேலம் மாதேஸ்வரன் துவக்கி வைத்தார்.
புதிய நீதி கட்சி தலைவர் பொன்னுரங்கம், நெய்வேலி சங்க தலைவர் ராஜகோபால், அனந்தம்மாள் அறக்கட்டளை தலைவர் செல்வநாதன், வளவனுார் சங்க தலைவர் சேகர், அரும்பார்த்தபுரம் சங்க தலைவர் சாரங்கபாணி, முன்னாள் எஸ்.பி., ஆறுமுகம், பா.ஜ., ரவிச்சந்திரன், குமரேசன் வாழ்த்துறை வழங்கினர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் வைத்தியநாதன், கண்ணன், சுரேஷ், சங்கர், உதயகுமார், சண்முகம், நரேந்திரன் செய்திருந்தனர்.
துணை தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.