/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்குறள் முற்றோதல் சாதனை மாணவிக்கு விருது
/
திருக்குறள் முற்றோதல் சாதனை மாணவிக்கு விருது
ADDED : மார் 16, 2026 04:35 AM

புதுச்சேரி: மணவெளி அரசுத் தொடக்கப்பள்ளியில் அனைத்து திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்த மாணவிக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், 1330 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்த 5ம் வகுப்பு மாணவி சமந்தராவுக்கு, 'திருக்குறள் செல்வி' விருதினை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, தொடக்கக்கல்வி இணை இயக்குநர் கவுரி ஆகியோர் வழங்கினர்.
பள்ளி துணை ஆய்வாளர் வாஞ்சிநாதன், தமிழ்ச்சங்கச் செயலர் மோகன்தாசு, தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி, முற்றோதல் பயிற்றுநர் சங்கீதா கண்ணன், தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் ஆனந்தராசன், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

