/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே போட்டியில் பிளாக் பெல்ட் வழங்கல்
/
கராத்தே போட்டியில் பிளாக் பெல்ட் வழங்கல்
ADDED : அக் 31, 2024 05:32 AM

புதுச்சேரி : மாநில அளவிலான நடந்த கராத்தே போட்டியில், மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி அஜன் ஸ்கான் கோஜி காய் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், கராத்தே போட்டி மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி, கவுண்டம்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அஜன் ஸ்கான் கோஜி காய் கராத்தே பயிற்சி தொழிநுட்ப வல்லுநர் அன்பழகன் முன்னிலை வகித்தார். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை, அசோக்பாபு எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சியில், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், கராத்தே பயிற்சியாளர் சென்சாய் ஜோதிமணி, பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி சுந்தராஜன், சங்கீதா, அருள்ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.