/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மேக்கிங் இந்தியா மாநாட்டில் ஆச்சார்யா கல்லுாரிக்கு விருது
/
மேக்கிங் இந்தியா மாநாட்டில் ஆச்சார்யா கல்லுாரிக்கு விருது
மேக்கிங் இந்தியா மாநாட்டில் ஆச்சார்யா கல்லுாரிக்கு விருது
மேக்கிங் இந்தியா மாநாட்டில் ஆச்சார்யா கல்லுாரிக்கு விருது
ADDED : அக் 02, 2024 03:49 AM

புதுச்சேரி : மும்பையில் நடந்த 'மேக்கிங் இந்தியா' மாநாட்டில், ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி மூன்று விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளது.
ஆச்சார்யா கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன் வழிகாட்டுதலின்படி, கல்லுாரி முதல்வர் குருலிங்கம் மேக்கிங் இந்தியா மாநாட்டுக்கு, கல்லுாரி மூலம் பல்வேறு விருதுகளுக்கு விண்ணப்பித்திருந்தார். அதில் ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரிக்கு 3-வகை விருதுகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
இதையடுத்து, மேக்கிங் இந்தியா மாநாடு, மும்பையில் நடந்தது. மாநாட்டின் முக்கிய நோக்கம் மாணவர்களின் திறன் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்துவதாகும். இந்த மாநாட்டில் 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.
இதில், உயர்கல்விக்கான சிறந்த விருது ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரிக்கும், சேஞ்ச் மேக்கர் விருது, கல்லுாரி முதல்வர் குருலிங்கத்திற்கும், 'ரைசிங் ஸ்டார்' விருது கல்லுாரி மெக்கானிக்கல் துறை இறுதியாண்டு மாணவி சரண்யா தேவிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகள், கல்லுாரிக்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக ஆச்சார்யா கல்வி குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன் தெரிவித்தார்.