/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துப்புரவு தொழிலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
/
துப்புரவு தொழிலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
துப்புரவு தொழிலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
துப்புரவு தொழிலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
ADDED : அக் 07, 2024 06:23 AM

புதுச்சேரி: துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உழவர்கரை நகராட்சி சார்பில், துாய்மை தின விழா செப்., 17ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை கொண்டாடப்பட்டது.
துாய்மை பழக்கம்- தார்மீக ஒழுக்கம் என்ற கருத்தை வலியுறுத்தி தொடர்பு துப்புரவு பணிகள், விழிப்புணர்வு வினாடி - வினா, கோலப்போட்டி, சைக்கிள் ஊர்வலம், மருத்துவ முகாம் நடந்தது.
துாய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, துாய்மை பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. துப்புரவு பணியாளர்கள், ஸ்வச்சதா கார்பரேஷன் பணியாளர்களுக்கு உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மெகா துாய்மை பணி:
இதேபோல், உழவர்கரை நகராட்சி சார்பில் லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் மெகா துாய்மைப் பணி நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தலைமையில் நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். 300 பேர் பங்கேற்ற இந்த முகாமில் 1,500 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன.