/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி ராணுவ வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா
/
மாஜி ராணுவ வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா
ADDED : ஜூன் 15, 2025 06:48 AM

புதுச்சேரி : கலாம் விதைகளின் விருட்சகம் சமூக இயக்கம் சார்பில், இந்திய ராணுவ வீரர்களுக்கு கவுர விழா மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, புதுவை தமிழ்சங்கத்தில் நடந்தது.
தமிழ்சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். தமிழாசிரியர் மனோவா மார்க்ஸ் வரவேற்றார்.
முதல் துளிர் சொசைட்டி தலைவர் வாசுகி ராமமூர்த்தி, செந்துார் முருகன் சேவை அறக்கட்டளை நிறுவனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் களாக புதுச்சேரி பல்கலைக்கழக முனைவர் இளமதி ஜானகிராமன், திரைப்பட இயக்குனர் புருனோ சாவியோ பங்கேற்று பேசினர்.
புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்கள் நலச்சங்க நிறுவனர் மோகன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முனைவர் ரேகா, தட்சசீலா பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியை கயல்விழி ஆகியோர் கருத்துரை வழங்கினார்.
ஏற்பாடுகளை கலாம் விதைகளின் விருட்சகம் சமூக இயக்க நிறுவனர் ராஜா செய்திருந்தார்.
மாணவி யுவஸ்ரீ நன்றி கூறினார்.