/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு விருதுகள் வழங்கல்
/
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு விருதுகள் வழங்கல்
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு விருதுகள் வழங்கல்
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு விருதுகள் வழங்கல்
ADDED : ஜூலை 12, 2025 03:24 AM

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.
சென்னையில் ஐ.சி.டி., அகாடமியின் 63வது பிரிட்ஜ் - 25 விழா நடந்தது. விழாவில் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் கல்லுாரி பொருளாளர் ராஜராஜன் தனசேகரனுக்கு இளைய தலைமுறை கல்வி தொழில் முனைவோர் விருது, கல்லுாரி இயக்குனர் வெங்கடாஜலபதிக்கு சிறந்து கல்லுாரி முதல்வர் விருது வழங்கப்பட்டது.
கல்லுாரி கணினி பொறியியல் துறை தலைவர் பிரேம்குமாருக்கு சிறந்த வழிகாட்டிக்கான விருது வழங்கப்பட்டது.
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு மோங்கோ டிபி (MONGO DB) இன் ஸ்கிள் எக்செலன்ஸ் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறை மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
தொடர்ந்து மலேசியாவில் நடந்த ஐ.சி.டி., அகாடமியின் 64வது பிரிட்ஜ் - 25ல் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி சர்வதேச தரம் வாய்ந்த பல்வேறு பண்ணாட்டு பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.