தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீட்டில் சூரிய ஒளி மின் நிலையம் நாளை விழிப்புணர்வு முகாம்

வீட்டில் சூரிய ஒளி மின் நிலையம் நாளை விழிப்புணர்வு முகாம்

வீட்டில் சூரிய ஒளி மின் நிலையம் நாளை விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜூலை 11, 2025 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2025 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீட்டு மேற்கூரையில், சூரிய ஒளி மின் நிலையம் அமைப்பது தொடர்பாக, மரப்பாலம் தனியார் மஹாலில் நாளை விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.

மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ் சன்யால் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இணைந்து, இலவச மின்சார திட்டத்தின் கீழ், வீடுகளில் மேற்கூரையில், சூரிய ஒளி மின் நிலையம் அமைப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தேங்காய்த்திட்டு சாலை மரப்பாலம் ஸ்ரீரங்கநாயகி மஹாலில் நாளை மாலை 4:00 மணியளவில், விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம், சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு, 1 கே.வி.க்கு 30 ஆயிரம், 2 கே.வி.க்கு 60 ஆயிரம், 3 கே.வி.,க்கு 78 ஆயிரம் ரூபாய் மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. மேலும் விபரங்களுக்கு 9489080373, 9489080374 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us