/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சோலார் பேனல் குறித்து விழிப்புணர்வு முகாம்
/
சோலார் பேனல் குறித்து விழிப்புணர்வு முகாம்
ADDED : மே 19, 2025 06:29 AM

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை சார்பில், பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
லாஸ்பேட்டை, விவேகாந்தா மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை மின்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
உதவி பொறியாளர்கள் பாண்டியன், சசிகுமார், சந்திரசேகர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஜான்சன், குமரேசன், அருண்பிரகாஷ், லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில், 200க்கும் மேற்பட்ட சோலார் பேனல் நிறுவனங்களின் ஊழியர்கள் பங்கேற்று, வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இத்திட்டத்தின் மூலம் சோலார் பேனல் அமைப்பதற்கு ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட்டிற்கு 60 ஆயிரம், 3 கிலோ வாட்டிற்கு 78 ஆயிரம் மானியமாக கிடைக்கும் என தெரிவித்தனர்.
மேலும், வங்கி கடனுதவியோடு சோலார் பேனல் அமைப்பதற்கு முகாமில் 3 வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.