/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
/
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஏப் 03, 2026 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் தேர்தல்துறை சார்பில் 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி கரகாட்டம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரி இஷிதா ரதி அறிவுறுத்தலின்படி, திருநள்ளாறு ஆணையர் நிலவழகன் முன்னிலையில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளான நெய்வாச்சேரி, சேத்துார், அம்பகரத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கரகாட்டம் மூலம் 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஓட்டுச்சாவடி நிலைய அதிகாரிகள் பிரவீன் குமார், ஜெயப்பிரகாஷ், மாரியப்பன், ஸ்வீப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

