ADDED : ஜன 30, 2024 06:18 AM

புதுச்சேரி, : புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஒருங்கிணைந்து மாதந்தோறும் விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நடத்தி வருகிறது. அதன்படி, இம்மாதத்திற்கான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நேற்று காரைக்கால், கீழகாசக்குடி, விநாயகா மிஷன் மெடிக்கல் கல்லுாரி மற்றும் மருத்துவமனையிலும், புதுச்சேரி மேட்டுபாளையம் தி புதுச்சேரி சேம்பர் ஆப் இன்டஸ்ட்ரீசிலும் நடந்தது.
கூட்டத்தில் தொழிலாளர்கள், பயனாளிகள் மற்றும் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டு இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப்.ஓ., சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொண்டனர்.