தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதி பூங்கா ஆயி மண்டபத்தில் விழிப்புணர்வு மனித சங்கிலி

பாரதி பூங்கா ஆயி மண்டபத்தில் விழிப்புணர்வு மனித சங்கிலி

பாரதி பூங்கா ஆயி மண்டபத்தில் விழிப்புணர்வு மனித சங்கிலி


ADDED : செப் 24, 2024 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : துாய்மை சேவையை வலியுறுத்தி புதுச்சேரி நகராட்சி சார்பில் ஆயி மண்டபத்தை சுற்றிலும், மனித சங்கிலி நடந்தது.

மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் துாய்மையே சேவை என்ற தலைப்பில் இருவார தொடர் துாய்மை பணி கடந்த 17 ம் தேதி துவங்கியது. இப்பணி வரும் 1ம் தேதிவரை நடக்க உள்ளது.

அதன் ஒருபகுதியாக துாய்மையே சேவை என்ற கருத்தியலை வலியுறுத்தி, பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபத்தை சுற்றி நடந்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியை ஆணையர் கந்தசாமி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.

தொடர்ந்து துாய்மை பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள், ஆயி மண்டபத்தை சுற்றிலும் மனித சங்கலியாக அணி வகுத்து துாய்மையே சேவை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொது இடங்களை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும். குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும். நீர் நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், சுகாதார அதிகாரி ஆர்த்தி, வருவாய் பிரிவு-2 அதிகாரி பிரபாகர், உதவி பொறியாளர்கள் பழனிராஜா, வெங்கடாசலபதி, நமச்சிவாயம், யுவராஜ், ஸ்வச்சதா நிறுவன பொது மேலாளர் அனுப்குமார், கிரீன் வாரியர் துறை தலைவர் ஜெகதீசன், ரீ சிட்டி நிறுவன நிர்வாகி காயத்ரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us