ADDED : செப் 29, 2024 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: அரியூரில் வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லுாரி சார்பில், உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து மருந்தியியல் துறை குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் கம்பன் கலையரங்க வளாகத்தில் துவங்கியது.
மருந்தியல் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
கல்லுாரி முதல்வர் ஜெயராமன், கல்வி ஆலோசகர் வெங்கட்ராமன் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊர்வலம் கம்பன் கலையரங்கம், அண்ணா சாலை, கடற்கரை சாலை, ரயில் நிலையம், பழைய பஸ் நிலையம் வழியாக மீண்டும் கம்பன் கலையரங்கை வந்தடைந்தது.