ADDED : நவ 14, 2024 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; மாநில சுகாதார இயக்கம் மற்றும் புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புகையிலை மற்றும் போதைபொருள் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் நடந்த கூட்டத்தில் மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ் வரவேற்றார். கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியின் இயக்குனர் உதயசங்கர் துவக்கவுரை ஆற்றினார்.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் போதை பழக்கத்தால் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் குறித்து பேசினார்.
மருத்துவக் கல்லுாரி இணை பேராசிரியர் பிரகாஷ் மதியழகன் 'புகையிலை மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்' குறித்து விளக்கினார்.
மருத்துவ கல்லுாரி டீன் ராமச்சந்திரபட் நன்றி கூறினார்.

