ADDED : பிப் 23, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் காவல்துறை சார்பில் பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் வரவேற்றார். திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்சோ சட்டம் குறித்து விளக்கினார்.
மேலும், கஞ்சா விற்பனை மற்றும் இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானது தெரியவந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதால், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நன்றாக படித்து, போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று முன்னேற வேண்டும் என, அறிவுறுத்தினார்.
சப் இன்ஸ்பெக்டர் பிரியா நன்றி கூறினார். காட்டேரிக்குப்பம் ராஜங்குளம், அமட்டன்குளம் பகுதி இளைஞர்கள், மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.