/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைவினைஞர்களுக்கான நிதி சார்ந்த கல்வி குறித்த விழிப்புணர்வு
/
கைவினைஞர்களுக்கான நிதி சார்ந்த கல்வி குறித்த விழிப்புணர்வு
கைவினைஞர்களுக்கான நிதி சார்ந்த கல்வி குறித்த விழிப்புணர்வு
கைவினைஞர்களுக்கான நிதி சார்ந்த கல்வி குறித்த விழிப்புணர்வு
ADDED : அக் 31, 2025 02:17 AM

புதுச்சேரி:  தட்டாஞ்சாவடி மாவட்ட தொழில் மையத்தில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் (எம்.எஸ்.எம்.இ), இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், தொழில்துறை மேம்பாடு வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகம் ஆகியன சார்பில், கைவினைஞர்களுக்கான நிதி சார்ந்த கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இணைப் பேராசிரியர் அனந்தவல்லி ரமேஷ் வரவேற்றார். அரசு செயலர் விக்ராந்த் ராஜா பங்கேற்று, அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டத்தின் மூலம், எம்.எஸ்.எம்.இ., நிதி மேலாண்மை திறன்களை வலுப்படுத்தி நிலையான வணிக வளர்ச்சியை அடைய முடியும். போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், புதுச்சேரியில் நீண்டகால தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் கைவினைஞர்களின் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நிதி எழுத்தறிவு ஆலோசகர் ராஜா, மூத்த மேலாளர் ஜோசபின் சாய்ராணி நிதி சார்ந்த கல்வி குறித்த புரிதல், இணைப் பேராசிரியர் அனந்தவல்லி ரமேஷ், 'வணிக மேம்பாடு, வருவாய் மற்றும் இடர்களை கையாளும் யுக்தி', வேலுார் டி.ஐ.பி.எஸ். அகாடமியின் இயக்குனர் விஜயகணேஷ், 'பட்ஜெட், பணப்புழக்கம் மற்றும் மூலதன மேலாண்மை', கோனேரிகுப்பம் ஆதித்யா மேலாண்மை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் மதனே, 'டிஜிட்டல் நிதி சார்ந்த கருவிகள் மற்றும் இணக்க விழிப்புணர்வு' தலைப்புகளில் பேசினர்.
தொடர்ந்து, மாவட்ட தொழில் மையத்தின் இயக்க மேலாளர் ஜெயராமன், பல்வேறு எம்.எஸ்.எம்.இ. திட்டங்கள் மற்றும் அரசின் தொழில் வளர்ச்சி முயற்சிகளை விவரித்தார்.
மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் கோவிந்தராஜன் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் பங்கேற்று நிதி திட்டமிடல் மற்றும் நிறுவன மேலாண்மை குறித்த விளக்கம் பெற்றனர்.
திட்ட அலுவலக மேலாளர் தினேஷ் பாபு நன்றி கூறினார்.

