தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு

 உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு

 உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு


ADDED : மே 29, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 'உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள்'குறித்த விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி நடந்தது.

வளாகங்கள் மற்றும் சமூகங்களில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான சங்கம், தேசிய உயிரியல் பன்முகத்தன்மை ஆணையம், புதுச்சேரி உயிரியல் பன்முகத்தன்மை மன்றம் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.நிகழ்ச்சியில் சங்கத்தின்நிர்வாக இயக்குனர் கோல்டா எட்வின் வரவேற்றார். முனைவர் விஷ்ணு வர்தன் நோக்கவுரை ஆற்றினார்.

தேசிய பல்லுயிர் ஆணையத்தின் தலைவர் வீரேந்திர திவாரி, இணையதளம் மூலம் பயிரிடப்பட்ட மருத்துவ தாவரங்களுக்கான 12 மூலச்சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், மக்கள் பல்லுயிர் பதிவேடுகள் மூலம் உள்ளூர் பல்லுயிர்களை ஆவணப் படுத்துதல்,பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளித்தல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துல், அணுகல் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தல், உயிரியல் வளங்கள் மீது கட்டணம் விதித்தல் மற்றும்பாரம்பரிய அறிவைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களின் பங்குகள் குறித்து விளக்கினார்.

புதுச்சேரி பல்லுயிர் மன்றத்தின் செயலாளரும், தலைமை வனவிலங்கு காப்பாளருமான அருள் ராஜன், பல்லுயிர் சட்டத்தின் கீழ் புதுச்சேரியில் நகராட்சி மற்றும் கிராமப்புறங்களை உள்ளடக்கி 19 பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது' என்றார்.

உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவூ மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் மொகந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us