/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரை சாலையில் விழிப்புணர்வு ஊர்வலம்
/
கடற்கரை சாலையில் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 22, 2024 02:02 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரை சாலையில் நடந்த சைக்கிள் பிரசார விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில், மத்திய அரசின், ஸ்சுவச் பாரத் திட்டத்தின் கீழ், 'துாய்மையே சேவை' எனும் இரு வார துாய்மை பணி கடந்த, 17ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடற்கரை சாலையில், புதுச்சேரி நகராட்சி அலுவலகம் எதிரில், காலை 7:00 மணிக்கு சைக்கிள் பிரசார சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார்.
அமைச்சர் நமச்சிவாயம், பாஸ்கர் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், போலீஸ்துறை தலைமை அதிகாரி அஜித்குமார் சிங்ளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த சைக்கிள் பிரசார ஊர்வலம் அலுவலகம் சுப்பையா சாலை, அண்ணா சாலை, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக மீண்டும் கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.