/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 29, 2025 03:20 AM

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கல்லுாரியில் யு.பி.எஸ்.சி., தேர்விற்கான நோக்குநிலை நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாஜலபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குநர் பூமிநாதன் கலந்து கொண்டு பேசுகையில், ஐ.ஏ.எஸ்., மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்ன, அதை எழுதுவதற்கு தகுதியுடையோர் யார், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தேர்விற்கு தயாராகும் முறை குறித்து விளக்கினார்.
மாணவர்களின் லட்சியங்களை நிறைவேற்றும் நோக்கில், மணக்குள விநாயகர் ஐ.ஏ.எஸ்., அகாடமி, கிங்மேக்கர்ஸ் அகாடமியுடன் இணைந்து மாணவர்களின் சிவில் சர்வீஸ் கனவுகளை அடைய வழி நடத்தவும், தயார்படுத்தவும் இந்த பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்களின் ஐ.ஏ.ஏஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் கனவுகளை நிறைவேற்றும் தன்மையில் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஏற்பாடுகளை கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் உயிரி அறிவியல் துறைத் தலைவர் ராஜாராம், ஆங்கிலத்துறைத் தலைவர் இளமாறன், பயோமெடிக்கல் துறைத்தலைவர் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.