ஜிப்மரில் 'சூப்பர் உமன் சிண்ட்ரோம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜிப்மரில் 'சூப்பர் உமன் சிண்ட்ரோம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 26, 2026 09:08 PM

புதுச்சேரி: ஜிப்மரில், பெண்களின் வாழ்வில் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கும் மனநலப் பிரச்சினையான 'சூப்பர் உமன் சிண்ட்ரோம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், மியாட் மருத்துவமனையின் மனநல நிபுணர் லட்சுமி பிரபா பங்கேற்று, பேசியதாவதுன
'சூப்பர் உமன் சிண்ட்ரோம்' என்பது மருத்துவ ரீதியான நோயல்ல. ஆனால், சமூக மற்றும் உளவியல் சூழலால் உருவாகும் ஒரு நிலை. பெண்கள் பல பொறுப்புகளை ஒரே நேரத்தில் திறம்பட மேற்கொள்வதற்காக பாராட்டப்படுவதிலிருந்து, அதையே ஒரு நிரந்தர எதிர்பார்ப்பாக மாற்றும் மனப்போக்கு சமூகத்தில் உருவாகியுள்ளது.
எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அதையும் சிறப்பாகச் செய்ய வேண்டும். அதே நேரத்தில் சோர்வு காட்டக் கூடாது என்ற அழுத்தம் பெண்களிடம் மெல்ல மெல்ல நிலைபெறுகிறது. இது அழுத்தமாக மாறும் பயணம் பெண்களின் மனநிலையை பாதிக்கும் முக்கிய காரணமாக மாறுகிறது. பல பெண்கள் உள்ளுக்குள் அமைதியான சோர்வு, உணர்ச்சி சலிப்பு, தொடர்ச்சியான அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள்.
நாம் எல்லாவற்றையும் செய்யாமல் விட்டால் அனைத்தும் சிதைந்து விடும் என்ற பெண்களின் உள்ளார்ந்த பயத்தையும் இந்த அமர்வு சவால் செய்தது. உண்மையில், ஆதரவு மற்றும் புரிதல் உள்ள சூழலில், பெண்கள் மேலும் வலுவாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட முடியும். ஆதரவு கிடைக்கும் போது, ஒரு பெண் பல வீனமடைவதில்லை. மாறாக, மேலும் உறுதியானவராக மாறுகிறார்' என்றார். நிகழ்ச்சியில், ஜிப்மர் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
