தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூன் 20, 2025 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2025 02:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி நலவழித்துறை, லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கிராமப்புற செவிலியர் அமுதா வரவேற்றார். பெண் சுகாதார மேற்பார்வையாளர் ராதாமுத்து, சுகாதார உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தனர். நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி பத்மினி தலைமை தாங்கி, தீவிர வயிற்றுப் போக்கை தடுப்பதற்கான துாய்மை மற்றும் ஓ.ஆர்.ஆர்., கரைசல் குறித்து பேசினார். மருத்துவ அதிகாரி யுவராஜ் வயிற்றுப்போக்கு வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, ஓ.ஆர்.எஸ்., கரைசல் பாக்கெட் மற்றும் துத்த நாக மாத்திரைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர் நிர்மலா, சுகாதார உதவி ஆய்வாளர் ரேணுகாதேவி ஆகியோர் செய்திருந்தனர். கிராமப்புற செவிலியர் கவிதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us