/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
/
கண் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 26, 2025 07:29 AM

புதுச்சேரி : சிய கண்தான இருவார விழாவையொட்டி, கண் தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை, புதுச்சேரி தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது. நிகழ்ச்சிக்கு, ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் லட்சுமிபதி தலைமை தாங்கினார். வாசன் கண் மருத்துவமனை சிறப்பு கண் மருத்துவர்கள் முகமது இப்ராஹிம் ஆசிப், மிருணாளினி, மேரி ஸ்டீபன் முன்னிலை வகித்தனர்.
தேசிய பார்வை இழப்பு தடுப்புத் திட்ட இயக்குனர் வர்ஷினி ஒபேளா கிரிதர கோபாலன், ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், இந்திரா காந்தி, மணக்குள விநாயகர், ராக் செவிலியர் கல்லூரி மாணவ - மாணவிகள், வாசன் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி தன்னார்வலர்கள் முகத்தில் ஓவியம் வரைந்தும், கண் தான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுச்சேரி கம்பன் கலையரங்கம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், புஸ்சி வீதி வழியாக சென்று பாரதி பூங்காவில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.