தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கடல் ஆமைகளைப் பாதுகாக்க புச்சேரியில் விழிப்புணர்வு சிற்பங்கள்

கடல் ஆமைகளைப் பாதுகாக்க புச்சேரியில் விழிப்புணர்வு சிற்பங்கள்

கடல் ஆமைகளைப் பாதுகாக்க புச்சேரியில் விழிப்புணர்வு சிற்பங்கள்


UPDATED : நவ 23, 2026 07:51 PM

ADDED : நவ 23, 2026 07:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 07:51 PM ADDED : நவ 23, 2026 07:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடல் ஆமைகளின் அழகையும், அவற்றின் வாழ்வாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களையும் கலை வடிவில் எடுத்துரைக்கும் வகையில், புதுச்சேரியில் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட கடல் ஆமைச் சிற்பங்கள் பெங்களூரு பன்னர்கட்டா உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடலின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதில் கடல் ஆமைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, கடலில் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், கடல் உணவுச் சங்கிலியின் சமநிலையைப் பேணுவதில் இவை பெரும் பங்காற்றுகின்றன. உலகம் முழுவதும் ஏழு வகையான கடல் ஆமைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள், புதுச்சேரி மற்றும் தமிழகக் கடற்கரைகளில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.

கடலில் மனிதர்களால் ஏற்படுத்தும் பிளஸ்டிக் கழிவுகள், மீன்பிடி வலைகளில் சிக்குவது உள்ளிட்ட காரணங்களால் ஏராளமான ஆமைகள் உயிரிழக்கின்றன. கடல் மாசுபாடு அவற்றின் இனப்பெருக்கத்தையும் வாழ்விடத்தையும் பாதித்து வருகிறது.

இத்தகைய சூழலில், கடல் ஆமைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், புதுச்சேரி முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தில் செயல்பட்டு வரும் வனவிலங்குகள் கலை மையத்தில் ஆமைச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இயக்குநர் பூபேஷ் குப்தா தலைமையிலான கலைஞர்கள் குழுவினர், கடல் ஆமைகளின் இயற்கையான அளவு, உடல் அமைப்பு, வடிவம் மற்றும் நிறம் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லாமல், பார்ப்பவர்களுக்கு உண்மையான ஆமைகளையே நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இச்சிற்பங்களை வடிவமைத்துள்ளனர்.

முன்னதாக, புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்ட இந்தச் சிற்பங்கள், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து, கடல் ஆமைகள் குறித்த விழிப்புணர்வை மேலும் பலரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தற்போது பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடல் ஆமைகளின் உருவத்தை ரசிப்பதோடு நின்றுவிடாமல், அவற்றின் வாழ்வுக்கு மனிதர்களால் ஏற்படும் பாதிப்புகளையும் பார்வையாளர்கள் உணர வேண்டும் என்பதே இந்தக் கலை முயற்சியின் அடிப்படை நோக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us